Theme Check

வேலைக்கு ஆட்கள் தேவை.. கரூரில் சர்ச்சையை கிளப்பிய சுவரொட்டி !!

வேலைக்கு ஆட்கள் தேவை.. கரூரில் சர்ச்சையை கிளப்பிய சுவரொட்டி !!

வேலைக்கு ஆட்கள் தேவை.. கரூரில் சர்ச்சையை கிளப்பிய சுவரொட்டி !!
X

தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்புகளில் வடமாநிலத்தவர்களின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது என்றே கூறலாம். பனியன் நிறுவனங்கள், ஹோட்டல்களில், கட்டுமான பணிகள் உள்ளிட்ட பெருவாரியான பணிகளில் வடமாநிலத்தவர்கள் அதிகளவில் உள்ளனர். அதிகவேலை, குறைவான கூலி என்பதை கருத்தில்கொண்டே பணி செய்து வருகின்றனர்.

அதாவது, தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சாதி, மதத்தின் பெயரில் பிளவுப்பட்டு வரும் நிலையில், வேலை செய்வதில் இருந்து திசைமாறி வரும் நிலையில் இந்த இடத்தை வடமாநிலத்தவர்கள் பிடித்து வருவதாக கூறப்படுகிறது.

north

இந்த நிலையில், கரூர் மாநகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி, கொசுவலை, விசைத்தறி, பேருந்து கூண்டு கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவற்றில் ஆட்கள் தேவை என்ற அறிவிப்பு வைக்கப்பட்டிருக்கும் பலகையும் சுவரொட்டியும் பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் திருமாநிலையூரில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு ஆட்கள் தேவை என கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. அதில் முதலில் ஆங்கிலத்தில் வாண்டட் என்றும், அதனை தொடர்ந்து இந்தி, வங்க மொழியிலும், 4ஆவதாக தமிழில் 'வேலைக்கு ஆட்கள் தேவை, என அச்சிட்டுள்ளனர்.
north job
மேலும், தமிழில் தறி ஓட்டுநர், தறி மெக்கானிக், சூப்பர்வைசர், பாவு ஓட்டுபவர் தேவை. முன் அனுபவம் உள்ளவர்கள் மற்றும் அனுபவமில்லாதவர்களுக்கு தகுதிக்கேற்ற சம்பளம் வழங்கப்படும்' என்ற வாசகம் இருவரின் செல்போன் எண்களோடு அச்சிடப்பட்டுள்ளது. மேலும் மேலே தமிழில் கூறியுள்ள வார்த்தைகள் இந்தி மொழியிலும் அச்சிட்டு, அதன் கீழே ஆங்கிலத்திலும் அச்சிட்டுள்ளனர்.

கரூரில் உள்ள கொசுவலை, தறி, செங்கல் சூளை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மேற்கு வங்கம் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த 7,000த்திற்கும் அதிகமானோர் பணியாற்றுகின்றனர். இவற்றில் பெரும்பாலானோர் குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வருகின்றனர். அதனால் அவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் இந்தி, வங்கி மொழிகளில் ஆட்கள் தேவையென்ற அறிவிப்பு இந்தியில் அச்சிடப்பட்டுள்ளன என கூறப்படுகிறது.


newstm.in

Next Story
Share it