Theme Check

தமிழக மக்களே உஷார்.. அடுத்த 12 மணி நேரத்தில்.. வானிலை மையம் எச்சரிக்கை..!

தமிழக மக்களே உஷார்.. அடுத்த 12 மணி நேரத்தில்.. வானிலை மையம் எச்சரிக்கை..!

தமிழக மக்களே உஷார்.. அடுத்த 12 மணி நேரத்தில்.. வானிலை மையம் எச்சரிக்கை..!
X

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் அடுத்த 12 மணி நேரத்தில் புயல் உருவாகும் என்றும், தமிழகத்தில் இன்றும் நாளையும் இயல்பை விட அதிக வெப்பம் பதிவாகக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘நேற்று காலை தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு - வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று காலை 5.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 8.30 மணியளவில் வடகிழக்கு அந்தமான் - நிகோபார் தீவு - போர்ட் பிளேரில் இருந்து 140 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது.

இது, அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று, அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மியான்மர் கடற்கரை நோக்கி நகரக் கூடும். மேலும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்றும் நாளையும் தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மார்ச் 23-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகபட்ச வெப்பநிலை இருக்கக் கூடும். சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
Share it