மக்களே கவனம்..! 31 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு..!!
மக்களே கவனம்..! 31 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு..!!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக சில குறிப்பிட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதமும் எழுதி இருந்தது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,594 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,594 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெங்களூருவில் உள்ள தனியார் பள்ளியில் 10 மாணவர்களுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள தாசரஹள்ளி பகுதியில் உள்ள 2 பள்ளிகளில் மொத்தம் 31 மாணவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட வகுப்பறை மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தாசரஹள்ளி மண்டல சுகாதார அலுவலர் சுரேஷ் ருத்ரப்பா கூறுகையில், தாசரஹள்ளி மண்டலத்தில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று கண்டறியப்பட்டது. அதேபோல், ராஜகோபால் நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 5 மற்றும் 6-ம் வகுப்பு படிக்கும் 21 மாணவர்களுக்கு கடந்த வியாழக்கிழமை தொற்று கண்டறியப்பட்டது.
மேலும், அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிற பணியாளர்களும் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளனர். அறைகள் மற்றும் வளாகங்களில் கிருமிநாசினி தெளிப்பதன் மூலம் மாணவர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு கண்காணிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

பெங்களூருவில் நேற்று 400 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், 358 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை 3,542 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 29 பேர் மருத்துவமனையில் உள்ளனர். அதில் 3 பேர் தீவர சிகிச்சை பிரிவில் உள்ளதாக பிபிஎம்பி தெரிவித்துள்ளது.

