மக்களே கவனிங்க.. ஆதார் கார்டை வைத்து பணம் சம்பாதிக்க முடியுமா?
மக்களே கவனிங்க.. ஆதார் கார்டை வைத்து பணம் சம்பாதிக்க முடியுமா?

இந்திய குடிமகன்கள் அனைவருக்கும் தனிநபர் அடையாள அட்டையாக ஆதார் கார்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது எவ்வித அரசு சார்ந்த திட்டங்கள், பயன்கள் பெறுவதற்கும் ஆதார் கார்டு அவசியமாகிறது. இந்த நிலையில், ஆதார் கார்டு வெறும் அடையாள அட்டை மட்டுமல்ல, பணம் சார்ந்த விஷயங்களுக்கும் அது முக்கியம் என்பது தெரியவந்துள்ளது.
வங்கிப் பணியாக இருந்தாலும் சரி, சட்டப் பணியாக இருந்தாலும் சரி, அனைத்து இடங்களிலும் ஆதார் எண் தேவைப்படுகிறது.
ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஆதார் அட்டை அத்தியாவசிய அடையாள அட்டையாக செயல்படுகிறது. மத்திய, மாநில அரசுகள் அல்லது பிற அமைப்புகளிடமிருந்து ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட ஜீவன் பிரமான் பத்திரம் (ஆயுள் சான்றிதழ்) அவசியம். இந்த ஆயுள் சான்றிதழ் திட்டம் பிரதமர் நரேந்திர மோடியால் நவம்பர் 10, 2014 அன்று தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்களுடைய ஆதார் அட்டையின் மூலம் டிஜிட்டல் முறையில் அவர்களின் தகவல்களைப் பெறுவதால், அவர்களது ஓய்வூதியத்தை நேரடியாக வீட்டிலேயே பெறுவதை உறுதி செய்கிறது.

அதேபோல் மத்திய அரசின் பிஎம் கிசான் யோஜனா திட்டத்தில் நிதியுதவி பெற ஆதார் அவசியம். இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கு 6000 ரூபாய் பணம் கிடைக்கிறது. இத்திட்டத்தின் கீழ் இதுவரையில் மொத்தம் 10 தவணைகள் வழங்கப்பட்டு விட்டன. இது தவிர, பல்வேறு வகையான அரசுத் திட்டங்களுக்கு ஆதார் அட்டை அவசியம்.
மேலும் பொதுமக்கள் பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு அரசு தரப்பிலிருந்து மானியம் வழங்கப்படுகிறது. இந்த மானியத் தொகை வெவ்வேறு அளவில் உள்ளது. இதைப் பெறுவதற்கு சிலிண்டர் இணைப்புடன் ஆதார் கார்டை இணைத்திருக்க வேண்டும். அப்போதுதான் பணம் கிடைக்கும்.

பள்ளி அல்லது கல்லூரியில் சேர்க்கைக்கான முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு உள்ளது. இதுதவிர, ஆதார் அட்டை வங்கிக் கணக்கைத் திறப்பதற்கும் பயனுள்ளதாக இருக்கும். ஆதார் அட்டையில் உள்ள முகவரி மற்றும் புகைப்படம் வங்கிகளால் செல்லுபடியாகும் முகவரிச் சான்றாகக் கருதப்படுகிறது. பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களில் KYC சரிபார்ப்பு மற்றும் சுயவிவர பராமரிப்புக்காக ஆதார் அட்டை பயன்படுத்தப்படுகிறது.
newstm.in

