Theme Check

மரத்தில் 11 அடி நீள ராஜநாகத்தை கண்டு அலறிய மக்கள்.. லாவகமாக பிடித்த வனத்துறையினர் !!

மரத்தில் 11 அடி நீள ராஜநாகத்தை கண்டு அலறிய மக்கள்.. லாவகமாக பிடித்த வனத்துறையினர் !!

மரத்தில் 11 அடி நீள ராஜநாகத்தை கண்டு அலறிய மக்கள்.. லாவகமாக பிடித்த வனத்துறையினர் !!
X

கோவை மரத்தில் இருந்த 11 அடி நீளம் பயங்கரமான ராஜ நாகத்தை பிடித்த வனத்துறையினர் வனப் பகுதிக்குள் விட்டனர்.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உருளிகள் எஸ்டேட் பகுதியில் தேயிலை தோட்ட பணியாளர்கள் ஏராளமானோர் நாள்தோறும் பணிக்கு சென்று வருகின்றனர். அங்குள்ள தொழிற்சாலை வளாகத்தில் பெரிய மரம் ஒன்று உள்ளது.

rajanagam

அந்த மரத்தில் ராஜ நாகம் ஒன்று இருப்பதை பார்த்த மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். மேலும் அச்சம் காரணமாக அங்கு செல்லவே மக்கள் பெரிதும் அச்சம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த மானம்பள்ளி வனச்சரக வனத்துறையினர் ராஜ நாகத்தை பிடிக்கும் முயற்சியில் களம் இறங்கினர்.

எனினும் கூடுதல் பணி மற்றும் பாதுகாப்புக்காக பாம்பு பிடிக்கும் தன்னர்வளர்களும் வரவழைக்கப்பட்டனர். இதையடுத்து வனத்துறையினரும் பாம்புகள் பிடிக்கும் தன்னர்வளர்களும் இணைந்து தொழிற்சாலை பகுதி மரத்தில் இருந்த ராஜநாக பாம்பை லாவகமாக பிடித்தனர். அப்போது ராஜநாகம் சீறியது பெரும் அச்சத்தை உண்டாக்கியது.

rajanagam

எனினும் பாம்பு பிடிப்பவர்கள் அதனை கவனத்துடன் பிடித்தனர். இந்த ராஜநாகம் சுமார் 11 அடி நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட பெண் பாம்பு என்பது ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து வனச்சரகர் மணிகண்டன் முன்னிலையில் ராஜநாகத்தை வனப் பகுதிக்குள் விட்டனர்.


newstm.in


Next Story
Share it