#BREAKING:- தொடரும் மக்கள் போராட்டம்.. இலங்கையில் அவசரநிலை பிரகடனம்..!
#BREAKING:- தொடரும் மக்கள் போராட்டம்.. இலங்கையில் அவசரநிலை பிரகடனம்..!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்கள் உணவின்றியும், எரிபொருட்கள் இன்றியும் தவித்து வருகின்றனர். மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யாத அரசைக் கண்டித்து மக்கள் போராட்டம் வெடித்தது.
அண்மையில் அதன் உச்சகட்டமாக, அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் மாளிகையை கைப்பற்றினர். தொடர்ந்து அங்கேயே தங்கி உள்ளனர். மேலும், பிரதமரின் தனி வீட்டையும் முற்றுகையிட்டு தீவைத்தனர்.
அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்துவிட்டு மாலத்தீவுக்கு தப்பிச் சென்றுவிட்டார். அதேபோல், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இந்நிலையில், மக்களின் போராட்டம் தொடரும் நிலையில் இலங்கையில் அவசர நிலையை பிரகடனப்படுத்துவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அலுவலகம் அறிவித்துள்ளது.
இலங்கையின் அடுத்த இடைக்கால பிரதமராக சஜித் பிரேமதாச நியமிக்கப்படுவார் என நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான எஸ்.ஜே.பி. தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, வரும் 20-ம் தேதி நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தி புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

