''பெரியார் வேடமிட்ட குழந்தையை தூக்கிலிட வேண்டும்''.. விஷத்தை கக்கிய அரக்கன் கைது !!
''பெரியார் வேடமிட்ட குழந்தையை தூக்கிலிட வேண்டும்''.. விஷத்தை கக்கிய அரக்கன் கைது !!

பெரியார் வேடமிட்ட குழந்தையை அடித்துக்கொன்று தூக்கிலிட வேண்டும்.. என்று பதிவிட்டவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குழந்தைகள் பங்கேற்கும் ‘ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ்’ நிகழ்ச்சியில், தந்தை பெரியார் கெட்டப்பில் சிறுவர்கள் ஃபர்மாமென்ஸ் செய்து நடித்துக் காட்டினர்.
அப்போது பெரியார் கருத்தை நாடக வடிவிக் கையில் எடுத்திருந்த சிறுவர்கள், பெண் விடுதலை, பெரியார் ஏன் கடவுளை எதிர்த்தார்? மததத்தை தூக்கியெறியச் சொல்லியது ஏன்? என்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய காட்சிகள் தமிழ்நாட்டு மக்களின் நெஞ்சகளில் பதியும் வண்ணமாக அமைந்திருந்தது. அதாவது, மக்கள் மனதில் எளிதில் பதியும்படி இருந்ததால் நல்ல வரவேற்பு கிடைத்தது.

ஆனால், இதனைப் பார்த்த தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த பேரூராட்சி தற்காலிக பணியாளர் வெங்கடேஷ் குமார் பாபு என்ற நபர், பெரியார் வேடமிட்ட குழந்தையை அடித்துக் கொன்று தூக்கிலிட வேண்டும் என்று சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அவரது பதிவு கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதனிடையே, அவரை கைது செய்ய வலியுறுத்தி கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போலீசில் புகார் அளித்திருந்தனர்.
இந்நிலையில் வெங்கடேஷ் குமார் பாபு தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில், கைது செய்யப்பட்டுள்ளார். வன்மத்துடன் வெங்கடேஷ் குமார் பாபு கூறிய கருத்துக்கள் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. குழந்தை என்று பாராமல் அவரை அடித்துக் கொல்ல வேண்டும் கூறும் அளவுக்கு, வெங்கடேஷின் மனநிலை மாறியது சமூகத்தின் மோசமான நிலைமையை வெளிப்படுத்துகிறது.

இத்தகையை வெறுப்பை ஏற்படுத்தியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டால் மட்டுமே அமைதியான சூழல் நிலவும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகளை நேரில் அழைத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in

