Theme Check

பெரியார் சிலை உடைப்பு.. விழுப்புரத்தில் பரபரப்பு..!

பெரியார் சிலை உடைப்பு.. விழுப்புரத்தில் பரபரப்பு..!

பெரியார் சிலை உடைப்பு.. விழுப்புரத்தில் பரபரப்பு..!
X

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் நிறுவப்பட்டிருந்த பெரியார் சிலை மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் பெரியார் படிப்பகம் அமைந்துள்ளது. அதன் அருகில், மார்பளவு பெரியார் சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு, அடையாளம் தெரியாத யாரோ சிலர் பெரியார் சிலையை சேதப்படுத்தியுள்ளனர்.
விழுப்புரத்தில் பெரியார் சிலை மர்ம நபர்களால் சேதம் - போலீசார் விசாரணை |  Police investigate on Periyar statue broken in Villupuram |  Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil ...
பெரியார் சிலையில் இருந்த கண்ணாடி உடைக்கப்பட்டதுடன், முகம் மற்றும் மூக்கு அமைந்துள்ள பகுதியில் உடைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இன்று காலை அதை கவனித்த அந்தப் பகுதி மக்கள், இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அந்த இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்ட போலீசார், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிலையை சுற்றி கம்பி வேலி அமைக்கப்பட்டிருந்த நிலையில், கம்பி வேலியை உடைத்து அதற்குள் இருந்த சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
Share it