Theme Check

மானிய விலையில் பெட்ரோல்..?

மானிய விலையில் பெட்ரோல்..?

மானிய விலையில் பெட்ரோல்..?
X

புதுச்சேரி பிரதேச ஆட்டோ டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் (சி.ஐ.டி.யு.) கூட்டம் சித்தன்குடியில் உள்ள நாடார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, சங்கத்தின் தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் மணவாளன் சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்தார்.

தமிழ்நாடு பொதுச்செயலாளர் சிவாஜி தொடக்க உரையாற்றினார். கவுரவ தலைவர் முருகன், பிரதேச தலைவர் கே.முருகன், தனியார் போக்குவரத்து தொழிலாளர் சங்க செயலாளர் மதிவாணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதில், அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியத்தை அரசு உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். மத்திய அரசு உயர்த்தியுள்ள ஆர்.டி.ஓ. அபராதம், புதுப்பித்தல் என அனைத்து கட்டணத்தையும் குறைக்க வேண்டும். ஆட்டோக்களுக்கு மானிய விலையில் பெட்ரோல் வழங்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, ஆட்டோ தொழிலாளர்கள் சீருடை அணிந்து, காமராஜர் சிலை சதுக்கத்தில் இருந்து ஊர்வலமாக கூட்டம் நடைபெற்ற மண்டபத்திற்கு சென்றனர்.

Tags:
Next Story
Share it