தொடர்ந்து 6ஆவது நாளாக உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை!!
தொடர்ந்து 6ஆவது நாளாக உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை!!

கடந்த 7 நாட்களில் ஆறாவது முறையாக இன்றும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்துள்ளது. இதனால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 105 ரூபாயை தாண்டியுள்ளது.
இன்றைய நிலவரப்படி சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 28 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 33 காசுகளும் உயர்ந்துள்ளது. இதனால் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.105.18க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.95.33க்கும் விற்பனையாகி வருகிறது.

கடந்த 7 நாட்களில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.78, டீசல் லிட்டருக்கு ரூ.3.90 அதிகரித்திருக்கிறது. உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
இதனால் பெட்ரோல், டீசல் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 5 மாநில தேர்தல் காரணமாக விலை உயராமல் இருந்த நிலையில், தற்போது மீண்டும் தினமும் எரிபொருள் விலை உயர்த்தப்படுவதால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
newstm.in

