கார் மீது விழுந்த விமானம் ..!! ஒருவர் பலி..!! வீடியோ வெளியீடு
கார் மீது விழுந்த விமானம் ..!! ஒருவர் பலி..!! வீடியோ வெளியீடு

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் மியாமி நகரில் கடந்த 14-ந் தேதியன்று ஒரு தனியார் சிறிய ரக விமானம் மியாமி நெடுஞ்சாலை பாலத்தில் ஒரு கார் மீது மோதிய பின்னர் தீப்பிடித்தது. இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், குழந்தைகள் உள்பட 5 பேர் காயமடைந்தனர்.
இது தொடர்பான வீடியோ கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது. சிறிய விமானம் தரைமட்டமாகி சாலையின் நடுவில் எரிந்து, அடர்ந்த கறுப்புப் புகையை வெளியேற்றுவதை வீடியோ காட்டுகிறது.
மேலும் அந்த வீடியோவில், ஒரு சேதமடைந்த எஸ்யூவி சிறிது தொலைவில் உள்ளது. நியூயார்க் போஸ்ட்டின் படி, விமானம் மியாமி டேட் கவுண்டியில் உள்ள பிஸ்கெய்ன் விரிகுடாவின் வடக்கு முனையில் உள்ள ஹாலோவர் இன்லெட் பாலத்தில் தரையிறங்கியபோது கார் மீது மோதியது.
விபத்துக்கு உள்ளான அந்த தனியார் விமானம் 3 பயணிகளை ஏற்றிச் சென்றபோது, மின்சாரத்தை இழந்து விழத் தொடங்கியது. அது இறுதியில் நெடுஞ்சாலைப் பாலத்தில் தரையிறங்க முயன்றபோது இந்த சம்பவம் நடந்தது.
விபத்தில் சிக்கிய எஸ்யூவியை ஒரு பெண் தனது இரண்டு குழந்தைகளுடன் ஓட்டிச் சென்றார். அவர்கள் அனைவரும் காயமின்றி உயிர் பிழைத்தனர்.
Awful private plane crash in #mia @nbc6 pic.twitter.com/LjJg7bgUtM
— Alex Huberman (@lexSayzzz) May 14, 2022