Theme Check

அரியலூர் அருகே விமானம் விழுந்து விபத்து?

அரியலூர் அருகே விமானம் விழுந்து விபத்து?

அரியலூர் அருகே விமானம் விழுந்து விபத்து?
X

அரியலூர் - பெரம்பலூர் மாவட்ட எல்லைப்பகுதியில் பயங்கர வெடி சத்தம் கேட்டதால் விமானம் விழுந்து விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று தகவல் பரவியது.

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே வங்காரம், தத்தனூர், அங்கனூர் கிராமத்திற்கு இடையே உள்ள வனப்பகுதியில், பயங்கர வெடி சத்தம் கேட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

பயங்கர வெடி சத்தத்திற்கு காரணம் பயிற்சி விமானமோ அல்லது ஹெலிகாப்டரோ கீழே விழுந்து வெடித்து சிதறி இருக்கலாம் என தகவல் பரவியது.

ary 1

இதன் காரணமாக அரியலூர் - பெரம்பலூர் மாவட்ட எல்லைப்பகுதியில் பொது மக்கள், செந்துறை வட்டாட்சியர் அதிகாரிகள் மற்றும் போலீசார் ஏராளமானோர் திரண்டு சம்பவ இடத்தை தேடி கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் அதிஷ்டவசமாக எவ்வித அசம்பாவிதமும் நிகழாதது அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் ஆய்வின் போது தெரிய வந்துள்ளது.

இதன் காரணமாக பெரம்பலூர்- அரியலூர் மாவட்ட எல்லையோர பகுதியில் வசிக்கும் பொது மக்கள் மத்தியில் பெரும் பீதியும், பரபரப்பும் நிலவியது.

newstm.in

Next Story
Share it