Theme Check

36 நாடுகளின் விமானங்கள் ரஷ்ய வான்வெளியில் பறக்க தடை.. புதின் பதிலடி !!

36 நாடுகளின் விமானங்கள் ரஷ்ய வான்வெளியில் பறக்க தடை.. புதின் பதிலடி !!

36 நாடுகளின் விமானங்கள் ரஷ்ய வான்வெளியில் பறக்க தடை.. புதின் பதிலடி !!
X

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தொடர்ந்து 5ஆவது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் கீவை கைப்பற்றும் நோக்கில் ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதல் நடத்தி வருகிறது. அதேநேரத்தில் தலைநகர் கீவ்-வில் கடந்த நான்கு நாட்களாக இருந்த தீவிரத்தைவிட, இன்று தாக்குதலின் தீவிரத்தை ரஷ்யா குறைத்தது. நாட்டை காப்பாற்றும் முனைப்பில் உள்ள உக்ரைன் படைகளும் போரிட்டு வருகின்றனர்.

இரு நாடுகளும் போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தின. ஆனால் ரஷ்யாவின் அழைப்பை உக்ரைன் முதலில் ஏற்கவில்லை. மீண்டும் ரஷ்யா அழைப்பு விடுத்தபோது, பேச்சுவார்த்தைக்கு சம்மதம் தெரிவித்தது. அதன்படி, பெலாரசின் கோமல் பகுதியில் இன்று அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர்.

plane

இந்த பேச்சுவார்த்தையின்போது உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் போரை முதலில் நிறுத்த வேண்டும். ரஷ்ய படைகள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்பன போன்ற நிபந்தனைகளை உக்ரைன் முன்வைத்துள்ளது.

இந்த நிலையில், ரஷ்ய விமானங்களுக்கு ஜெர்மனி, இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் தடை விதித்தன. இதற்கு பதிலடியாக ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட 36 நாடுகளின் விமானங்கள் ரஷ்ய வான்வெளியை பயன்படுத்த தடை விதித்து அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார்.

newstm.in

Next Story
Share it