மீண்டும் வா ப்ளீஸ்.. - நடிகர் தீப் சித்துவின் காதலி உருக்கம் !!
மீண்டும் வா ப்ளீஸ்.. - நடிகர் தீப் சித்துவின் காதலி உருக்கம் !!

வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் நடத்தியபோது, கடந்த ஆண்டு ஜனவரியில் டிராக்டர் பேரணி நடைபெற்றது. இதில் செங்கோட்டையில் அத்துமீறிக் கொடி ஏற்றப்பட்டது. இதனை ஏற்றியவர் பஞ்சாபி நடிகர் தீப் சிங் சித்து என வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவர் பஞ்சாப்பில் இளம் நடிகராக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார்.
இந்த நிலையில் நடிகர் தீப் சித்து இரு நாட்களுக்கு முன்பு பஞ்சாப்பிலிருந்து டெல்லி சென்று கொண்டிருந்தபோது, கார் விபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில் பஞ்சாபி நடிகையும், தீப் சித்துவின் காதலியுமான ரீனா ராய் தீப் சித்து மறைவு குறித்து தனது இன்ஸ்டாகிராமில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

அதில், நான் உடைந்துவிட்டேன்; உள்ளுக்குள் இறந்துவிட்டேன். வாழ்நாள் முழுவதும் என்னை விட்டு பிரியமாட்டேன் என உறுதியளித்திருக்கிறாய். ப்ளீஸ் மீண்டும் திரும்பி வா. ஐ லவ் யூ என் உயிரின் ஆத்மாவே, நீ தான் என் இதயத்தின் துடிப்பு. நான் இன்று மருத்துவமனையில் படுத்து கிடந்தபோது உன் விசும்பலை கேட்டேன் என் உயிரே.
எனக்கு தெரியும் நீ எப்போதும் என் உடனிருப்பாய். நாம் நம்முடைய எதிர்காலத்தை பற்றி நிறைய கனவுகள் வைத்திருந்தோம். இன்று நீ என்னை விட்டு சென்றுவிட்டார். ஆத்மார்த்தமான தோழர்கள் ஒருவரையொருவர் விட்டு பிரிந்துவிட மாட்டார்கள், நான் உன்னைக்காண்கிறேன், என்று மிக உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

அவருக்கு சமூக வலைதளங்களிலேயே ரசிகர்கள், திரை பிரபலங்கள் பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.
newstm.in

