Theme Check

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியீடு: 93.76% பேர் தேர்ச்சி.. சாதித்த மாணவிகள்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியீடு: 93.76% பேர் தேர்ச்சி.. சாதித்த மாணவிகள்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியீடு: 93.76% பேர் தேர்ச்சி.. சாதித்த மாணவிகள்
X

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.

அதன்படி, காலை 10 மணிக்கு சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார்.

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 7.55 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.4.27 லட்சம் மாணவிகள், 3.94 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 5.36% பேர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

school

பிளஸ் 2 பொதுத் தேர்வில் தமிழகம், புதுச்சேரியில் 93.76 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்தாண்டை விட இந்தாண்டு தேர்ச்சி விகிதம் அதிகம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வு எழுதிய 8,06,277 மாணவ, மாணவிகளில் 7,55,998 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்தாண்டை விட இந்தான்டு தேர்விகிதம் அதிகம் என்றும், மாணவர்களை விட மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்

12ம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழ்நாட்டிலேயே பெரம்பலூர் (97.95%) மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது. அதற்கு அடுத்தபடியாக விருதுநகர் (97.27%), ராமநாதபுரம் (97.02%) உள்ளது. 86.69% தேர்ச்சியுடன் வேலூர் மாவட்டம் மிக குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டமாக உள்ளது.

12ம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வு ஜூலை 27ம் தேதி நடைபெறும்.வரும் 24ம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
school
10ம் வகுப்பு பொதுத் தேர்வை 9,12,620 பேர் எழுதி உள்ளனர் . அதில் 90.07% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.ஒட்டு மொத்தமாக 10ம் வகுப்பில் 8,21,994 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ம் வகுப்பில் 4,52,499 மாணவிகளும் 4,60,120 மாணவர்களும் 3ம் பாலினத்தைச் சேர்ந்த ஒருவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 85.8% பேரும் மாணவிகள் 94.38% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.10ம் வகுப்புக்கான துணைத் தேர்வு ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி தொடங்கும்.10ம் வகுப்பில் 97.22% தேர்ச்சியுடன் குமரி மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.79.87% தேர்ச்சி மட்டுமே பெற்று வேலூர் மாவட்டம் கடைசி இடம் பிடித்துள்ளது.10ம் வகுப்பு தேர்வில் தமிழ் பாடத்தில் ஒரே ஒரு மாணவர் மட்டுமே 100 மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.10ம் வகுப்புத் தேர்வில் 85.25% அரசுப் பள்ளிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

newstm.in

Next Story
Share it