பிளஸ்-2 விடைத்தாள் நகல் இன்று வெளியீடு.. பதிவிறக்கம் செய்வது எப்படி தெரியுமா?
பிளஸ்-2 விடைத்தாள் நகல் இன்று வெளியீடு.. பதிவிறக்கம் செய்வது எப்படி தெரியுமா?

தமிழகத்தில் கடந்த மே மாதம் பிளஸ்-2 பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியான நிலையில், இதில் வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றனர். அதனைத்தொடர்ந்து பிளஸ்-2 முடித்த மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்து படிக்க தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில், பிளஸ்-2 பொதுத்தேர்வு விடைத்தாள் நகலை மாணவர்கள் இன்று (வியாழன்கிழமை) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, பிளஸ்-2 பொதுத்தேர்வு தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள் 14ஆம் தேதி (இன்று) முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று Notification பக்கத்தில் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டலுக்கு வரும் 15ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை அரசுத்தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகம் வாயிலாக விண்ணப்பிக்கலாம், என அதில் கூறப்பட்டுள்ளது.
newstm.in

