#BREAKING:- பிளஸ் 2 மாணவி தற்கொலை.. அரசுப் பேருந்து சிறைப்பிடிப்பு.. சாலை மறியல்..!

#BREAKING:- பிளஸ் 2 மாணவி தற்கொலை.. அரசுப் பேருந்து சிறைப்பிடிப்பு.. சாலை மறியல்..!

#BREAKING:- பிளஸ் 2 மாணவி தற்கொலை.. அரசுப் பேருந்து சிறைப்பிடிப்பு.. சாலை மறியல்..!
X

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தக்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூசணம். இவரது மனைவி முருகம்மாள். இவர்களின் ஒரே மகள் சரளா (17).

இவர், திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரி ஊராட்சியில் உள்ள அரசு நிதியுதவி பெறும் தனியார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில், விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்குச் செல்ல சீருடை அணிந்து சக மாணவியர்களுடன் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
திருவள்ளூர்: ப்ளஸ் டூ மாணவி பள்ளி விடுதியில் தற்கொலை; அரசுப் பேருந்து  சிறைப்பிடிப்பு... சாலை மறியல்! | school student commits suicide in  Tiruvallur police investigation ...
அதன் பின்னர் அந்த மாணவிகள் உணவு அருந்த சென்று விட்டனர். அப்போது தனியாக இருந்த மாணவி சரளா, தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் டிஎஸ்பி சந்திரதாசன், சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து பள்ளி நிர்வாகம் முறையாக தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறி மாணவியின் உறவினர்கள் கீழச்சேரி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவள்ளூர்: ப்ளஸ் டூ மாணவி பள்ளி விடுதியில் தற்கொலை; அரசுப் பேருந்து  சிறைப்பிடிப்பு... சாலை மறியல்! | school student commits suicide in  Tiruvallur police investigation ...
மாணவி சரளாவின் இறப்புக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை. இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாணவி தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. மப்பேடு காவல்துறையினர் மற்றும் மாவட்டக் காவல்துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளதால் கீழச்சேரி பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

மாணவி சரளாவின் சாவில் உள்ள மர்மத்தை வெளியில் கொண்டு வர வேண்டும். மாணவி இறப்புக்கு காரணமானவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவி சரளாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story
Share it