4 வயது சிறுவனால் பதறிப்போன போலிஸ்.. அப்படி என்ன நடந்தது?

4 வயது சிறுவனால் பதறிப்போன போலிஸ்.. அப்படி என்ன நடந்தது?

4 வயது சிறுவனால் பதறிப்போன போலிஸ்.. அப்படி என்ன நடந்தது?
X

நெதர்லாந்து நாட்டில் 4 வயது சிறுவன் வீட்டிலிருந்த தன் அம்மாவின் கார் சாவியை எடுத்து யாருக்கும் தெரியாமல் காரை இயக்க முயன்றபோது, அருகே இருந்த பிற கார்களையும் சேதப்படுத்தியுள்ளான். அப்போது காரின் ஆக்ஸ்லெட்டரை வேகமாக அழுத்தி காரை இயக்கியபோது கார் கட்டுப்பாடின்றிச் சென்று அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களில் மோதியுள்ளது.

இதனை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்துவந்த போலீசார் கார்களை அப்புறப்படுத்தி அந்த சிறுவனைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

சிறுவனை விசாரித்த போலீசார், சிறுவனின் அப்பா அலுவலகம் சென்ற போது, அவன் அம்மாவின் கார் சாவியை அவர்களுக்கே தெரியாமல் எடுத்து வந்து காரை இயக்கியுள்ளது தெரியவந்துள்ளது. பின்னர் சிறுவனின் பெற்றோரை போனில் அழைத்து வரச்சொல்லியுள்ளனர்.

1

இதில் வேடிக்கை என்னவென்றால், பெற்றோர் வரும்வரை சிறுவன் அழாமல் இருக்க சாக்லேட், பொம்மைகள் வாங்கி கொடுத்து பத்திரமாகப் பார்த்துக்கொண்டனர்.

இதுகுறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட போலீசார், அந்த சிறுவனை 2021-ன் பார்முலா-ஒன் கார் சாம்பியனான மேக்ஸ் வெர்ஸ்டப்பனோடு உடன் ஒப்பிட்டு, இந்த சிறுவன் புதிய மேக்ஸ் வெர்ஸ்டப்பன் என்று வேடிக்கையாக குறிப்பிட்டுள்ளனர்.

Tags:
Next Story
Share it