சொன்னதை செய்தது காவல்துறை.. கல்லூரி மாணவர்கள் 8 பேர் கைது..!
சொன்னதை செய்தது காவல்துறை.. கல்லூரி மாணவர்கள் 8 பேர் கைது..!

சென்னையில், அத்துமீறி நடந்து கொண்ட கல்லூரி மாணவர்கள் 8 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை மாநகரப் பேருந்து, புறநகர் மின்சார ரயில், கல்லூரி அமைந்துள்ள சாலைகளில் தொடர்ந்து ஆயுதங்களுடன் மாணவர்கள் சண்டை போட்டு வந்த நிலையில், இனி அத்துமீறி நடந்து கொள்ளும் மாணவர்கள் கைது செய்யப்படுவார்கள் என சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், பூந்தமல்லி ரூட் தல, திருத்தணி ரயில் ரூட் தல, நடத்துநரை கல்லால் அடித்த 3 மாணவர்கள், கல்லூரி விழாவில் கலந்து கொள்வதில் ஆயுதங்களுடன் பிரச்னையில் ஈடுபட்ட 3 மாணவர்கள் என மொத்தம் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதுவரை, அத்துமீறி நடந்து கொள்ளும் மாணவர்களை எச்சரித்து அனுப்பிய காவல்துறையினர், தற்போது கைது நடவடிக்கையில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story

