நடிகர் சூர்யா மீது காவல்துறை வழக்குப்பதிவு.. ரசிகர்கள் அதிர்ச்சி

நடிகர் சூர்யா மீது காவல்துறை வழக்குப்பதிவு.. ரசிகர்கள் அதிர்ச்சி

நடிகர் சூர்யா மீது காவல்துறை வழக்குப்பதிவு.. ரசிகர்கள் அதிர்ச்சி
X

ஜெய்பீம் பட விவகாரத்தில் நடிகர் சூர்யா, இயக்குநர் ஞானவேல் ஆகியோர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

2டி தயாரிப்பில் .செ. ஞானவேல் இயக்கத்தில் தமிழிலில் வெளியானது ஜெய்பீம் திரைப்படம். சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கடந்த ஆண்டு ஓடிடியில் வெளியான இப்படம் பெரும் பாராட்டை பெற்றது. அதேநேரத்தில் இந்த திரைப்படத்தில் வன்னியர் சமுதாய மக்களை அவமதிக்கும் நோக்கத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

கனள

இந்த நிலையில் ஜெய்பீம் திரைப்பட விவகாரத்தில் நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் .செ.ஞானவேல் ஆகியோர் மீது வேளச்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஒரு சாரர் மத உணர்வுகளுக்கு எதிராக உள்நோக்கத்துடன் செயல்படுதல் என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீருத்ர வன்னியர் சேவா அமைப்பு சார்பில் சந்தோஷ் என்பவர் அளித்த புகார் மனு மீது வேளச்சேரி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். நடிகர் சூர்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் கைது செய்யப்படுவாரா என்ற பேச்சு நிலவுவதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

newstm.in

Tags:
Next Story
Share it