கடன் செயலிகள் மூலம் லோன் பெற்றால் இவ்வளவு பிரச்சனைகள் வரும் - காவல்துறை எச்சரிக்கை..!!
கடன் செயலிகள் மூலம் லோன் பெற்றால் இவ்வளவு பிரச்சனைகள் வரும் - காவல்துறை எச்சரிக்கை..!!

கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள கடன் செயலிகள் மூலம் லோன் பெற வேண்டாம் என சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.இணையத்தளங்களில் கடன் வழங்கும் செயலிகள் அதிகரிப்பது கண்டறியப்பட்டுள்ளது.இதில் கடன் வாங்கும்போது, கடன் தொகையில் 30 சதவிகிதம் செயல்பாட்டு கட்டணமாக வசூலிக்கும் , அதிக வட்டி விதித்து பணம் வசூலிக்கிறது.செயலியின் மூலம் அலைபேசியில் உள்ள தொடர்பு எண்கள் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் அபகரிக்கப்படுகின்றன.இத்தகைய செயலிகளில் கடன் பெற வேண்டாமென சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அறிவுறுத்தியுள்ளார்.
லோன் ஆப் செயலிகள் மூலம் அதிக வட்டிக்கு கடன் கொடுத்து, பின் தொந்தரவு செய்யும் மோசடி கும்பலை, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சென்னை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும், குறிப்பிட்ட செயலிகளை கண்டறிந்து, அவற்றை பிளே ஸ்டோரில் இருந்து நீக்குவதற்கு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். இதனிடையே, லோன் ஆப் செயலிகள் மூலம் கடன் வாங்கும் போது, தனிப்பட்ட விவரங்களை சேகரித்துக் கொண்டு, குறிப்பிட்ட நாட்களில் பணத்தை திருப்பி செலுத்தாத பட்சத்தில், மிரட்டல் விடுப்பது வாடிக்கையாக உள்ளது.
மேலும், வாடிக்கையாளர்களின் நண்பர்கள், உறவினர்களின் செல்போன் எண்ணுக்கு ஆபாசமாக குறுஞ்செய்திகளும் அனுப்பப்படுகின்றன. எனவே, பொதுமக்கள் யாரும் இத்தகைய லோன் செயலிகளில் கடன் பெற வேண்டாம் என, சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கேட்டக் கொண்டுள்ளார்.