Theme Check

அரசியலில் உச்சகட்ட குழப்பம்.. தலைநகரில் 144 தடை உத்தரவு..!

அரசியலில் உச்சகட்ட குழப்பம்.. தலைநகரில் 144 தடை உத்தரவு..!

அரசியலில் உச்சகட்ட குழப்பம்.. தலைநகரில் 144 தடை உத்தரவு..!
X

மகாராஷ்டிராவில் சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணியில் ‘மகாவிகாஸ் அகாடி’ என்ற கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணியில் உள்ள, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிரா முதல்வராக செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில், சிவசேனா கட்சியின் மூத்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மகா விகாஸ் அகாடி அரசுக்கு எதிராக திரும்பியுள்ளார். அவர் தனது ஆதரவாளர்களான 50 எம்எல்ஏ-க்களுடன் அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ஹோட்டலில் தங்கியுள்ளார்.

இதில், 40 எம்எல்ஏ-க்கள் சிவசேனாவை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால், மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி அரசு கவிழும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
Maharashtra political crisis: Section 144 imposed in Mumbai, police on high  alert | Cities News,The Indian Express
மகாராஷ்டிரா அரசியலில் உச்சகட்ட குழப்பம் நிலவும் நிலையில், உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக திரும்பியுள்ள எம்எல்ஏ-க்களை கண்டித்து சிவசேனா கட்சி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தலைநகர் மும்பையில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஜூலை 10-ம் தேதி வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று மும்பை போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
Share it