Theme Check

அடுத்த ஆணுடன் ஆபாச பேச்சு.. வழக்கு தொடர்ந்த கணவன்.. விவாகரத்து வழங்கியது கோர்ட்..!

அடுத்த ஆணுடன் ஆபாச பேச்சு.. வழக்கு தொடர்ந்த கணவன்.. விவாகரத்து வழங்கியது கோர்ட்..!

அடுத்த ஆணுடன் ஆபாச பேச்சு.. வழக்கு தொடர்ந்த கணவன்.. விவாகரத்து வழங்கியது கோர்ட்..!
X

கேரளாவைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்ய குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியுள்ளதாவது:

“என் மனைவி, இரவு நேரங்களில் வேறொரு ஆணுடன் போனில் ரகசியமாக பேசுகிறார். இருவரும் மிகவும் ஆபாசமாக பேசிக் கொள்கின்றனர். இது பற்றி என் மனைவியிடம் நான் பல முறை எச்சரித்தேன். ஆனால், அவர் கேட்கவில்லை.

மேலும், ‘உங்களை விட, அவர்தான் எனக்கு மனதளவிலும், உடல் அளவிலும் நெருக்கமானவர்' என கூறுகிறார். அவருடைய நடத்தை மீது, எனக்கு சந்தேகம் உள்ளது. அதனால், எனக்கு விவாகரத்து வழங்க வேண்டும்’ எனக் கூறியிருந்தார்.

இந்த மனுவை குடும்ப நல நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவர், கேரள உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி கவுசர் எடப்பாக்த், “வேறு ஒருவருடன் போனில் பேசுவதை வைத்து ஒரு பெண்ணின் நடத்தை மீது சந்தேகம் கொள்ள முடியாது. அவர் மோசமானவர் என்றும் கூற முடியாது; கூறவும் கூடாது.

இந்த வழக்கில், வேறு ஒரு ஆணுடன் மனைவி நெருக்கமாக இருந்ததை மனுதாரர் நேரில் பார்க்கவில்லை. இருந்ததற்கான ஆதாரமும் இல்லை.

ஆனால், கணவர் எச்சரித்த பின்னும், இரவில் வேறு ஒரு ஆணுடன் போனில் ரகசியமாக மனைவி பேசுவது நல்லதல்ல; அது, திருமண வாழ்க்கையை சீரழிக்கும் செயல்.

இந்த வழக்கில், தம்பதி இருவரும் ஏற்கெனவே இரண்டு முறை பல்வேறு காரணங்களால் பிரிந்து, மீண்டும் இணைந்துள்ளனர். அதனால், இவர்கள் மீண்டும் சேர்ந்து வாழ்ந்தால் நிம்மதி இருக்காது. எனவே, மனுதாரருக்கு விவாகரத்து வழங்குகிறேன்” என்று தீர்ப்பளித்தார்.

Next Story
Share it