வறுமை எனும் அரக்கன்.. கடிதம் எழுதிவிட்டு அக்கா, தம்பி எடுத்த விபரீத முடிவு !!
வறுமை எனும் அரக்கன்.. கடிதம் எழுதிவிட்டு அக்கா, தம்பி எடுத்த விபரீத முடிவு !!

மூத்த சகோதரி, சகோதரன் ஆகியோர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் கே.கே. சாலையில் உள்ள குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர்கள் பிரமிளா (52) சுசீந்திரன் (50). சகோதரி, சகோதரனான இருவரும், சினிமா துணை நடிகையிடன் உதவியாளராக பணியாற்றி வந்துள்ளனர். எனினும் இந்த கொரோனா அவர்களை கடும் வறுமையின் பிடியில் தள்ளியுள்ளது.
தொடர்ந்து வறுமை காரணமாக விழுப்புரத்தில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தனர். இந்நிலையில் இவர்களின் நடமாட்டம் இல்லாததால் அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்தனர். மேலும் வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த, சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது இருவரும் தூக்கில் தொங்கிபடி அழுகிய நிலையில் இருந்துள்ளனர். இதைத் தொடர்ந்து விழுப்புரம் நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் அங்கு கைப்பற்றப்பட்ட கடிதத்தில், எங்கள் சாவுக்கு யாரும் காரணமில்லை. வறுமை காரணமாகவே தாங்கள் தற்கொலை முடிவை எடுத்துள்ளோம் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வறுமை தான் காரணம் கடிதம் எழுதி வைத்துவைத்து அக்கா, தம்பி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in

