Theme Check

மாற்றங்களை ஏற்க பழக வேண்டும்.. ஐகோர்ட் கிளை அதிரடி..!

மாற்றங்களை ஏற்க பழக வேண்டும்.. ஐகோர்ட் கிளை அதிரடி..!

மாற்றங்களை ஏற்க பழக வேண்டும்.. ஐகோர்ட் கிளை அதிரடி..!
X

திருச்சி, துவரங்குறிச்சி பேருந்து நிலையத்தின் பெயரான காமராஜர் பேருந்து நிலையம் என்ற பெயரை மாற்றக்கூடாது என உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.எம்.பிரகாஷ் மற்றும் ஆனந்தி அமர்வு, ‘ஊரின் பெயரை மாற்றுவது, பேருந்து நிலையத்தின் பெயரை மாற்றுவது தமிழக அரசின் கொள்கை முடிவு சார்ந்தது. பெயர் மாற்றத்தில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க இயலாது.

மெட்ராஸ், சென்னையாக பெயர் மாற்றம் செய்யப்பட்டதை ஏற்றுக்கொண்டோம். மாற்றங்களை ஏற்க பழக வேண்டும். துவரங்குறிச்சி பொன்னம்பட்டி பேரூராட்சி பேருந்து நிலையம், காமராஜர் பேருந்து நிலையம் என்றே அழைக்கப்படுகிறது’ எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.
Next Story
Share it