Theme Check

தகாத உறவால் கர்ப்பம்.. தனக்கு தானே பிரசவம் பார்த்து குழந்தையை கழிவறையில் வீசிச் சென்ற பெண்..!

தகாத உறவால் கர்ப்பம்.. தனக்கு தானே பிரசவம் பார்த்து குழந்தையை கழிவறையில் வீசிச் சென்ற பெண்..!

தகாத உறவால் கர்ப்பம்.. தனக்கு தானே பிரசவம் பார்த்து குழந்தையை கழிவறையில் வீசிச் சென்ற பெண்..!
X

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பேடு பகுதியில் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலை அருகே தனியார் மருத்துவமனை ஒன்று உள்ளது.

இந்த மருத்துவமனை கழிவறையில் கடந்த 3-ம் தேதி மாலை 6 மணி அளவில், பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தை இறந்து கிடந்ததை ஊழியர்கள் கண்டுள்ளனர்.

இதுகுறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சோழவரம் போலீசார், அந்த சிசுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, மருத்துவமனையின் டாக்டர்கள் மற்றும் ஊழியர்களிடம் விசாரித்தனர். அதற்கு அவர்கள், ஆஸ்பத்திரியில் பிரசவம் ஏதும் நடைபெறவில்லை; யாரோ இந்த குழந்தையை வைத்து விட்டு சென்று உள்ளதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆஸ்பத்திரியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

அப்போது, குழந்தையின் உடல் மீட்கப்பட்டதற்கு முதல் நாள் இரவு 10.30 மணியளவில் கர்ப்பிணி ஒருவர் மருத்துவமனைக்கு வந்ததும், சிறிது நேரத்திலேயே அவர் சர்வ சாதாரணமாக வெளியே நடந்து சென்றதும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது தெரியவந்தது.

இதனால் சந்தேகமடைந்த போலீசார், அந்தப் பெண் குறித்து விசாரித்தனர். விசாரணையில், அந்தப் பெண் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த சாய்ரா பானு(33) என்பது தெரியவந்தது.

அந்தப் பெண்ணை காவல் நிலையத்திற்கு கூட்டி வந்து விசாரித்தபோது, அவரின் கணவர் 4 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்ததும், லாரி டிரைவர் ஒருவருடன் தகாத உறவில் இருந்த போது குழந்தை உருவானதும் தெரியவந்தது.

கர்ப்பமான சாய்ரா பானுவுக்கு கடந்த 2-ம் தேதி பிரசவ வலி வந்த நிலையில் அவர் மற்றொரு பெண்ணின் துணையோடு மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

வயிற்று வலி எனக் கூறி மருத்துவமனைக்கு வந்த சாய்ரா பானு நேராக கழிவறைக்கு சென்று அங்கு தனக்கு தானே பிரசவம் பார்த்துள்ளார். அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

பின்னர் அந்த குழந்தையை கழிவறையின் சுவற்றின் மீது வைத்துவிட்டு, எதுவும் நடக்காதது போல் மருத்துவமனையை விட்டு வெளியேறியுள்ளார்.

இரவு முழுவதும் பசியால் துடித்த அந்த பச்சிளம் குழந்தை உயிரிழந்தது. இதையடுத்து, குழந்தையை கொலை செய்த குற்றத்திற்காக சாய்ரா பானுவை போலீசார் கைது செய்தனர்.

Next Story
Share it