போலி மருத்துவரால் கர்ப்பிணி உயிரிழப்பு..!!
போலி மருத்துவரால் கர்ப்பிணி உயிரிழப்பு..!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த கீழ்ப்பாடி கிராமத்தை சேர்ந்த சின்னதம்பி, இவரது மனைவி செல்வி (வயது 25). இவர்களுக்கு திருமணம் ஆகிய 7 வயதில் ஒரு மகள், 3 வயதில் ஒரு மகள் உள்ளனர்.
இந்த நிலையில் செல்வியின் கணவர் சின்னதம்பி பெங்களூரில் கூலி வேலை செய்து அடிக்கடி சொந்த கிராமத்திற்க்கு வந்து செல்வார்.
இந்த நிலையில் செல்வி 5 மாத கர்ப்பிணி இருந்த நிலையில் சூளாங்குறிச்சி மணிமுத்தாறு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோதனை செய்ததில் குழந்தை இருதய குறைபாடு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து இவர்கள் பல்வேறு மருத்துவமனைக்கு கருக்கலைப்பு செய்ய சென்றுள்ளனர். அவர்கள் முடியாது என்று மறுக்கவே, குழந்தையை கலைக்க மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர்.
அங்கே கலைக்க முடியாது என்று சொன்னதால் தியாகதுருவம் தனியார் மருத்துவமனைக்குச் சென்று உள்ளார் அங்கேயும் முடியாது என்று மறுத்ததால் உள்ளூரில் உள்ள நியூ ரோஷிதா மெடிக்கலில் மருத்துவம் படிக்காமல் நடத்தி வந்த மணிகண்டன் இவருடைய மனைவி முத்துகுமாரி மற்றும் சங்கராபுரம் அருகே உள்ள இளையனார் குப்பம் கிராமத்தில் மெடிக்கல் வைத்துள்ள கவிதா ஆகியவர்கள் மூன்று பேரும் இணைந்து நேற்று இரவு மெடிக்கல் மாடியில் அபார்ஷன் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிக உதிரப் போக்கு ஏற்பட்டு சுயநினைவு இழந்ததால் மேல் சிகிச்சைக்காக காரில் ஏற்றும் பொழுது இறந்துவிட்டார்.
பிரேத பரிசோதனைக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உயிரிழந்த செல்வியின் தாயார் குப்பாயி கொடுத்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப் பதிவு செய்து மருத்துவம் பார்த்தவர்களை தேடி வருகின்றனர்.

