திட்டமிட்டு வன்முறையா? - கள்ளக்குறிச்சி பள்ளியில் தடய அறிவியல் நிபுணர்கள் ஆய்வு !!

திட்டமிட்டு வன்முறையா? - கள்ளக்குறிச்சி பள்ளியில் தடய அறிவியல் நிபுணர்கள் ஆய்வு !!

திட்டமிட்டு வன்முறையா? - கள்ளக்குறிச்சி பள்ளியில் தடய அறிவியல் நிபுணர்கள் ஆய்வு !!
X

சின்னசேலம் தனியார் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கடந்த 17ஆம் தேதி பள்ளி வளாகத்தில் பெரிய அளவிலான வன்முறை வெடித்தது. இதில் பள்ளி சூறையாடப்பட்டது. இது தொடர்பாக இதுவரை 300 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு, அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

issue

இந்த நிலையில், வன்முறை சம்பவம் திட்டமிட்டு நடைபெற்றதா அல்லது யதேயச்சாக நடைபெற்றதா என்பது குறித்து இதுவரை உறுதியாக தெரியவில்லை. எனினும் சிலர் திட்டமிட்டே இந்த வன்முறையை நிகழ்த்தியதாக கூறப்படுகிறது. இதற்கான ஆதாரம் எதுவும் சிக்கவில்லை. இதனையடுத்து வன்முறை சம்பவம் திட்டமிட்டு நடைபெற்றதா அல்லது யதேயச்சாக நடைபெற்றதா என்பது குறித்து ஆராய விழுப்புரம் மாவட்ட தடய அறிவியல் துணை இயக்குநர் சண்முகம் தலைமையில் நிபுணர்கள் தனியார் பள்ளி வளாகத்தில் ஆய்வில் ஈடுபட்டனர்.

அப்போது, வன்முறையில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் என்ன மாதிரியான பொருட்களைக் கொண்டு வன்முறையில் ஈடுபட்டனர், என்ன ஆயுதங்களை பயன்படுத்தினர், வெடிபொருட்களை கொண்டு வந்தனரா என ஆய்வு செய்தனர்.

issue

மேலும், தீ வைப்பு சம்பவங்களுக்கு பயன்படுத்திய எரிபொருள், வன்முறையாளர்களின் நோக்கம் உள்ளிட்டவைக் குறித்தும் ஆய்வு நடத்தினர். அப்போது பள்ளி வளாகத்தில் இருந்த மதுபாட்டில்கள், சுத்தியல், தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சியின் அடையாளத்துடன் கூடிய துண்டு மற்றும் தென் புரட்சியாளர்கள் என்ற போராட்ட பதாகை உள்ளிட்டவற்றையும் கண்டெடுத்துள்ளனர்.

அத்துடன், பள்ளியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் அனைத்தும் சேதப்படுத்தப்பட்டு, அவற்றின் ஹார்டி டிஸ்க் எடுத்துச் சென்றும், சிலவற்றை சேதப்படுத்தி வீசியும் சென்றுள்ளனர். முழுமையான ஆய்வுக்குப் பின்னரே உறுதியாக தெரிவிக்க முடியும் என ஆய்வில் ஈடுபட்டு வரும் அதிகாரிகள் கூறினர்.

newstm.in

Next Story
Share it