Theme Check

அதிபர் ட்ரம்பின் முன்னாள் மனைவி இவானா காலமானார்..!!

அதிபர் ட்ரம்பின் முன்னாள் மனைவி இவானா காலமானார்..!!

அதிபர் ட்ரம்பின் முன்னாள் மனைவி இவானா காலமானார்..!!
X

அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்பின் முதல் மனைவி இவானா மேரி ட்ரம்ப் காலமானார். அவருக்கு வயது 73.

இவானா நியூயார்கில் உள்ள தனது இல்லத்தில் வசித்து வந்தார்.நேற்றைய தினம் நியூயார்க் நகர காவல்துறையின் அவசர உதவி எண்ணிற்கு வந்த அழைப்பின் பேரில், போலீசார் அந்த இடத்திற்கு சென்று பார்த்த போது, அங்கு இவானா சுயநினைவின்றி கிடந்ததாகவும், அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த போது அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாகவும், நியூயார்க் நகர போலீசார் தெரிவித்துள்ளனார். இவானாவின் மரணத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை எனவும், பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகு, அவரது இறப்பிற்கான காரணம் தெரிய வரும் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கங்களில் ட்ரம்ப் கூறியிருப்பதாவது, ”நியூயார்க் சிட்டியில் உள்ள தனது இல்லத்தில் இவானா காலமானார். அவர் ஓர் அற்புதமான, அழகான பெண். அனைவருக்கு ஊக்கமளிக்கும் வாழ்க்கையை அவர் வாழ்ந்தார்.அவருடைய பெருமையும் மகிழ்ச்சியும் அவருடைய மூன்று குழந்தைகளான டொனால்ட் ஜூனியர், இவாங்கா மற்றும் எரிக்தான். நாங்கள் அனைவரும் அவரைப் பற்றி பெருமைப்பட்டதை போல இவானா தனது பிள்ளைகள் பற்றி மிகவும் பெருமைப்பட்டார். இவானாவின் ஆத்மா சாந்தியடையட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

1

செக் ரிபப்ளிக் நாட்டில் பிறந்தவரான இவானா ட்ரம்ப், 1977ஆம் ஆண்டில் அப்போது தொழிலதிபராக இருந்த டொனால்டு ட்ரம்ப் அறிமுகமானார். பின்னர் இருவருக்கும் இடையே உறவு ஏற்பட்ட நிலையில், திருமணம் செய்து கொண்டனர். 1978ஆம் ஆண்டில் இருவருக்கும் டொனால்டு ட்ரம்ப் ஜூனியர் முதல் குழந்தையாகப் பிறந்தார். பின்னர் 1981ஆம் ஆண்டு மகள் இவாங்காவும், 1984ஆம் ஆண்டில் மூன்றாவதாக மகன் எரிக்கும் பிறந்தனர்.

டொனால்டு பிரபல தொழிலதிபர் என்ற நிலையில், அவரது மனைவி இவானாவும் ட்ரம்ப்பின் தொழில்களில் பங்கெடுத்து கணவரின் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக நின்றார். இருவருக்கும் இடையே 1992இல் விவாகரத்து ஆனாது.

முன்னாள் மாடலான இவானா, சிறந்த தொழிதிபராக இருந்தார். அவரது நிறுவனத்தைச் சார்ந்த ஆடைகள், நகைகள் அமெரிக்காவில் மிகவும் பிரபலம். சில புத்தகங்களையும் இவானா எழுதியிருக்கிறார்.

Tags:
Next Story
Share it