பின்வாங்கினார் உக்ரைன் அதிபர்! திடீர் அறிவிப்பு!!
பின்வாங்கினார் உக்ரைன் அதிபர்! திடீர் அறிவிப்பு!!

நேட்டோ அமைப்பில் சேர்த்துக் கொள்ளும்படி இனி வற்புறுத்த மாட்டோம் என உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
உக்ரைன், ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களான கீவ், கார்கிவ், சுமி உள்ள இடங்களில் ரஷ்யா தொடர்ந்து குண்டுமழை பொழிந்து வருகிறது. அங்குள்ள மக்கள் அதிகளவில் வெளியேறி வருகின்றனர்.
கிழக்கு உக்ரைனின் பகுதியான சுமி நகரை சுற்றி வளைத்து ரஷ்ய ராணுவம் அதிரடி தாக்குதலை தொடந்து நடத்தி வருகிறது. பிரதமர் மோடி பேசியதை அடுத்து கிமியிலிருந்து இந்தியர்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர்.

இதனிடையே தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி, உக்ரைனை நேட்டோவில் இணைந்து கொள்ள அந்த அமைப்பில் உள்ள நாடுகள் முனைப்பு காட்டவில்லை என்றார்.
மேலும் ரஷ்யாவுடனான போர் மற்றும் பல்வேறு சர்ச்சைகளை கருத்தில் கொண்டு தான் நேட்டோ அமைப்பு உக்ரனை சேர்த்துக்கொள்ள அஞ்சுவதாக அவர் தெரிவித்தார்.
மேலும் நேட்டோவில் அமைப்பிலிருந்து எதையும் கெஞ்சியோ, தானமாகவோ பெறும் நாடாக உக்ரைன் இருக்கக்கூடாது. மேலும் அப்படிப்பட்ட நாட்டின் தலைவராக நான் இருக்க விரும்பவில்லை என்று அவர் கூறினார்.

தன்னாட்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட டோனஸ்க் மற்றும் லூகான்ஸ்க் பகுதிகள் குறித்து ரஷ்யாவுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுப்பட விரும்புவதாக அவர் கூறினார்.
தனக்கு வாக்களித்த மக்கள் சரணடைய தயாராக இல்லை என குறிப்பிட்ட செலன்ஸ்கி, ரஷ்யாவால் சுதந்திரமான பகுதிகள் என அறிவிக்கப்பட்ட உக்ரைனின் அங்கமாக இருந்த கிரீமியா மற்றும் டான்பாஸின் எதிர்காலம் குறித்து ரஷ்யாவுடன் விவாதிப்போம் எனவும் கூறினார்.
newstm.in

