Theme Check

குடியரசுத் தலைவர் தேர்தல் – எதிர்க்கட்சிகளை ஆலோசனைக்கு அழைக்கும் மம்தா!!

குடியரசுத் தலைவர் தேர்தல் – எதிர்க்கட்சிகளை ஆலோசனைக்கு அழைக்கும் மம்தா!!

குடியரசுத் தலைவர் தேர்தல் – எதிர்க்கட்சிகளை ஆலோசனைக்கு அழைக்கும் மம்தா!!
X

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24ஆம் தேதியுடன் முடிவுடைகிறது. இதற்கிடையே, நாட்டின் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் ஜூலை 18ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 21ம் தேதி எண்ணப்பட உள்ளன. இதையடுத்து குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் பணியில் தேசிய கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன. குடியரசுத் தலைவர் தேர்தலில் மாநில கட்சிகளின் பங்கு அதிகளவில் தேவை என்பதால் மாநில கட்சிகளுடன் ஆலோசனை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளது.

பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தங்கள் கூட்டணி கட்சிகளுடன் இது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றன. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர், தென் மாநிலங்களை ஒன்றிணைத்து சரத்பவாரை குடியரசுத் தலைவர் வேட்பாளராக முன்னிறுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

mamta

இந்நிலையில், மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதன்படி டெல்லி, கேரளா, தமிழகம், ஒடிசா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், பஞ்சாப் மாநில முதலமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட 22 எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக ஜூன் 15-ம் தேதி டெல்லியில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். மத்திய அரசின் பல்வேறு அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் குறி வைக்கப்படுகிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

எனவே குடியரசு தலைவர் தேர்தலில் வலுவான பங்களிப்பை அளிக்க வேண்டும். குடியரசு தலைவர் தேர்தலில் ஒருமித்த கருத்து உள்ள அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

newstm.in

Next Story
Share it