Theme Check

ஜனாதிபதி தேர்தலுக்கான தேதி அறிவிப்பு..!

ஜனாதிபதி தேர்தலுக்கான தேதி அறிவிப்பு..!

ஜனாதிபதி தேர்தலுக்கான தேதி அறிவிப்பு..!
X

இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி காலம் அடுத்த மாதம் (ஜூலை) 24-ம் தேதி முடிவடைகிறது. இதனால், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலுக்கான தேதி இன்று அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: “ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது.

இதையடுத்து, அடுத்த ஜனாதிபதிக்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறும். தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஜூன் 25-ம் தேதி தொடங்கும்.

வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூன் 29 ஆகும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 30-ம் தேதி நடைபெறும். மனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி தேதி ஜூலை 2.

ஜூலை 21-ல் வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்தல் அதிகாரியாக ராஜ்ய சபாவின் செயலாளர் செயல்படுவார்” என அவர் தெரிவித்தார்.

Next Story
Share it