புதிய இந்தியாவை உருவாக்கியுள்ளார் பிரதமர் மோடி.. நடிகர் மாதவன் பாராட்டு

புதிய இந்தியாவை உருவாக்கியுள்ளார் பிரதமர் மோடி.. நடிகர் மாதவன் பாராட்டு

புதிய இந்தியாவை உருவாக்கியுள்ளார் பிரதமர் மோடி.. நடிகர் மாதவன் பாராட்டு
X

ஐரோப்பிய நாடான பிரான்சில், 75ஆவது கேன்ஸ் திரைப்பட விழா நடந்து வருகிறது. இந்தாண்டு திரைப்பட விழாவில், இந்திய திரையுலக விழா குழுவினர்கள் கவுரவிக்கப்பட்டு வருகின்றனர். மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் தலைமையில், இந்திய திரை நட்சத்திரங்கள், படைப்பாளிகள் கேன்ஸ் சென்றுள்ளனர்.

அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ் திரைப்பட நடிகர் மாதவன் பேசியதாவது, சாமானியர்களுக்கும் பணப்பரிவர்த்தனையை எளிமையாக்கும் விதமாக, பிரதமர் மோடி டிஜிட்டல் பொருளாதாரத்தை அறிவித்தார். அப்போது, இது மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என பலநாட்டு பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.

fg

'இந்தியா போன்ற நாடுகளில், ஸ்மார்ட் போன்களை எப்படி பயன்படுத்துவது என்பது விவசாயிகளுக்கு தெரியாது, என விமர்சிக்கப்பட்டது. ஆனால், 'டிஜிட்டல்' பணப்பரிவர்த்தனை துவங்கிய இரண்டு ஆண்டுகளில் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யும் நாடுகளில் இந்தியா முதன்மையாக விளங்குகிறது.

தங்களுக்கான பணம் வங்கிக் கணக்கில் வந்து சேர்ந்துவிட்டதா என்பதை தெரிந்து கொள்ள, விவசாயிகளுக்கு யாரும் சொல்லித்தர வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அது தான் புதிய இந்தியா. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இதை மிகப்பெரிய வெற்றியாக மாற்றிக் காட்டிஉள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.


newstm.in

Tags:
Next Story
Share it