Theme Check

நாளை சென்னை வருகிறார் பிரதமர் மோடி… பலத்த பாதுகாப்பு!!

நாளை சென்னை வருகிறார் பிரதமர் மோடி… பலத்த பாதுகாப்பு!!

நாளை சென்னை வருகிறார் பிரதமர் மோடி… பலத்த பாதுகாப்பு!!
X

மக்கள் நலத் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருகிறார்.

நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில், தேசிய நெடுஞ்சாலை துறையின் புதிய திட்டங்கள், ரயில்வே துறையின் புதிய திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். ஹைதராபாத்தில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு மாலை 5.10 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வருகிறார்.

பின்னர், ஹெலிகாப்டரில் புறப்பட்டு, ஐஎன்எஸ் அடையாறு வந்து, கார் மூலம் நேரு விளையாட்டு அரங்கம் வருகிறார். ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு 5.45 மணிக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடி அங்கு இரவு 7 மணிவரை நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

Stalin modi

நிகழ்ச்சியில் ரூ.31,400 கோடி மதிப்பீட்டிலான 11 மக்கள் நலத் திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார். இந்தத் திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரை ஆற்றுகிறார். தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி முன்னிலையில் இந்த விழா நடைபெறுகிறது.

முதலமைச்சர் மு..ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றுகிறார். சென்னை வரும் பிரதமரிடம் தமிழகம் சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு..ஸ்டாலின் வலியுறுத்தி மனு அளிப்பார் என்று கூறப்படுகிறது.

நிகழ்ச்சி முடிந்ததும் 7.05 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இருந்து புறப்பட்டு 7.35 மணிக்கு சென்னை விமான நிலையத்தை சென்றடைகிறார். பின்னர் அங்கிருந்து 7.40 மணிக்கு இந்திய விமானப் படை ..எப். பிபிஜே விமானத்தில் புறப்பட்டு டெல்லிக்கு இரவு 10.25 மணிக்கு செல்கிறார்.

newstm.in

Next Story
Share it