'பீஸ்ட்' பாடம் பார்க்க புதன்கிழமை விடுமுறை அளித்த தனியார் நிறுவனங்கள் !!

'பீஸ்ட்' பாடம் பார்க்க புதன்கிழமை விடுமுறை அளித்த தனியார் நிறுவனங்கள் !!

பீஸ்ட் பாடம் பார்க்க புதன்கிழமை விடுமுறை அளித்த தனியார் நிறுவனங்கள் !!
X

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் பீஸ்ட் படம் நாளை மறுநாள் (ஏப்ரல் 13) ரிலீஸாகவிருக்கிறது. பீஸ்ட் படத்தை முதல் நாளே பார்த்துவிடும் ஆசையில் பலரும் டிக்கெட் எடுத்திருக்கிறார்கள். இதனால் முதல்நாள் அடுத்த சில நாட்களுக்கு டிக்கெட் தியேட்டர்களில் இல்லை என்ற நிலை எட்டிவிட்டதாக கூறப்படுகிறது.

பீஸ்ட் படத்தை பார்க்கும் ஆர்வத்தில் புதன்கிழமை அன்று கல்லூரி மாணவர்களும், அலுவலகங்களுக்கு செல்பவர்களும் என்ன செய்யலாம் என மாத்தி யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதாவது பீஸ்ட் பார்க்க டிக்கெட்டை எடுத்து வைத்துவிட்டு, ஏப்ரல் 13ஆம் தேதி அன்று ஏதாவது பொய் சொல்லி லீவு போட முடிவு செய்திருக்கிறார்கள்.
beast
சில தைரியசாலிகளோ, உண்மையை சொல்லி லீவு கேட்டிருக்கிறார்கள். இந்நிலையில் தான் தனியார் நிறுவனம் ஒன்று, தனது ஊழியர்களுக்கு பீஸ்ட் படத்தை பார்க்க விடுமுறை அறிவித்துள்ளது. அந்நிறுவனத்தின் ஊழியர்கள் பலரும் பீஸ்ட் படத்தை முதல் நாளே பார்த்தாக வேண்டும் என்று டிக்கெட் எடுத்திருக்கிறார்கள்.

இதையடுத்து பீஸ்ட் படம் பார்க்க அவர்களுக்கு அரைநாள் விடுமுறை வழங்கி அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது அந்நிறுவனம். இதனால் அந்நிறுவன பணியாளர்கள் தற்போதே குஷியாக உள்ளனர். திருப்பூரில் செயல்பட்டு வரும் KNITBRAIN என்ற நிறுவனம் தனது ஊழியர்களுக்கு பீஸ்ட் படம் பார்க்க விடுமுறை அறிவித்துள்ளது.

beast

திருநெல்வேலியில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் ஒன்று பீஸ்ட் படம் பார்ப்பதற்காக தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் 30 ஊழியர்களுக்கு அரைநாள் விடுமுறை வழங்கி உள்ளது. அதுமட்டுமின்றி அவர்களுக்கு டிக்கெட்டும் புக் பண்ணி கொடுத்துள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

newstm.in

Tags:
Next Story
Share it