அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகும்.. உடனே இந்த ஆப்கள் டெலிட் செய்யுங்கள் !!
அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகும்.. உடனே இந்த ஆப்கள் டெலிட் செய்யுங்கள் !!

குறைந்த வட்டியில் உடனடியாக கடன் தருவதாகக் கூறி தனிப்பட்ட நபர்களின் ஆதார், பான் எண், மின்னஞ்சல் விவரங்களை பெறும் ஆன்லைன் செயலிகள், வாடிக்கையாளரின் தொலைபேசியில் உள்ள விவரங்களையும் சட்டவிரோதமாக பதிவிறக்கம் செய்வதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த விவரங்களை பயன்படுத்தி வாடிக்கையாளர்களை மிரட்டி அடாவடியாக பணம் வசூலிக்கப்படுவதாகவும் அதிகமாக புகார்கள் எழுந்து வருகின்றன.
அதாவது கடன் பெற்றவர் அல்லது அவரது குடும்பத்தினரின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து அவரது உறவினர்களுக்கே அனுப்புவோம் என அந்நிறுவனங்கள் மிரட்டுகின்றன. அந்த அளவுக்கு நம்மளுடைய தகவல்களை அவர்கள் திருடிவிடுகிறார்கள்.

இந்நிலையில் இதுகுறித்து எச்சரிக்கும் வகையில் வீடியோ ஒன்றை டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பேசியுள்ள அவர், சமீபகாலமாக லோன் ஆப்கள் பெருகி வருகின்றன. அந்த ஆன்லைன் லோன் ஆப்களில் கடன் பெற, உங்கள் புகைப்படத்துடன் அப்ளை பண்ணச் சொல்வார்கள். உங்கள் காண்டாக்ட் லிஸ்ட்டில் சிலர் பற்றிய தகவல்களை கேட்பார்கள். உங்கள் புகைப்படத்தை ஆபாசமாக மார்ஃபிங் செய்து உங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு அனுப்பிவிடுவோம் என மிரட்டி உங்களிடம் பணம் கறப்பார்கள்.
உங்களுக்கு நிம்மதி போய்விடும். இந்த போட்டோ உண்மை இல்லை என்றாலும் மற்றவர்கள் நம்பமாட்டார்கள். இப்படி ஒரு தர்ம சங்கடமான நிலைமையில் சிக்கவைத்து உங்களிடம் பணம் வசூலிக்கும் சம்பவங்கள் அதிகமாகி வருகின்றன. இதுதொடர்பாக எங்களுக்கு புகார்கள் வந்துள்ளன. காவல்துறையினர், இந்த செயலிகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த செயலிகளை முடக்கினாலும், புதிய பெயர்களில் இந்த கடன் செயலிகள் வந்து கொண்டுதான் இருக்கும்.

நீங்கள் ஏமாறக் கூடாது என்பதற்காக சில செய்லிகளை சொல்கிறேன். Euvalt, Masen Rupee, Lory loan, Wingo Loan, cici Loan, City cash ஆகிய செயலிகள் மோசடியான செயலிகள். இவற்றை ஒருபோதும் டவுன்லோடு செய்து விடாதீர்கள். ஒருவேளை உங்கள் போனில் இந்த ஆப்கள் இருந்தால் நீக்கி விடுங்கள். பாதுகாப்பாக இருங்கள்" என சைலேந்திர பாபு அந்த வீடியோவில் அறிவுறுத்தியுள்ளார்.
சில கடன் செயலிகள் ஆபத்தானவை, எச்சரிக்கையாக இருங்கள். Loan apps like Euvalt, Masen Rupee, Lory loan, Wingo Loan, cici Loan, City loan have come to adverse notice. Be ware. pic.twitter.com/dTnFaAW94P
— Dr. R. Stalin IPS (@stalin_ips) June 15, 2022
newstm.in

