தனியார் பள்ளி மாணவன் அரசுப் பள்ளி வளாகத்தில் தற்கொலை..!
தனியார் பள்ளி மாணவன் அரசுப் பள்ளி வளாகத்தில் தற்கொலை..!

ராய்ச்சூரில், தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவர் அரசுப் பள்ளி வளாகத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார்.
கர்நாடக மாநிலம், ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசுகுர் தாலுகா அன்வரி கிராமத்தில் வசிக்கும் தம்பதியின் மகன் கங்கண்ணா (14). இந்த சிறுவன், ராய்ச்சூர் மாவட்டம் மான்வி தாலுகா கவிதாலா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மல்லதகுட்டே கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
அதே கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் கங்கண்ணா தங்கி இருந்து பள்ளிக்கு சென்று வந்தார். நேற்று காலையில் அவர் வழக்கம் போல் பள்ளிக்கு புறப்பட்டு சென்றார்.
ஆனால், அவர் படிக்கும் தனியார் பள்ளிக்கு செல்லாமல், கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளிக்கு சென்று, அங்குள்ள வளாகத்தில் இருக்கும் கம்பியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கவிதாலா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

