Theme Check

தமிழகத்தில் நாளை முதல் தனியார் பள்ளிகள் இயங்காது..!

தமிழகத்தில் நாளை முதல் தனியார் பள்ளிகள் இயங்காது..!

தமிழகத்தில் நாளை முதல் தனியார் பள்ளிகள் இயங்காது..!
X

கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூர் கிராமத்தில் உள்ள சக்தி மெட்ரிகுலேசன் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்த மாணவி ஸ்ரீமதி(17) ஜூலை 13-ம் தேதி இரவு பள்ளியின் விடுதி மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

மாணவியின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக பெற்றோரும், உறவினர்களும் தெரிவித்துள்ளனர். மாணவியின் மரணத்திற்கு நியாயம் கேட்டு தொடர்ந்து சாலை மறியல் போன்ற போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி கலவரம்: 'போராட்டத்தில் மாணவியின் உறவினர் யாரும் இல்லை' -  வாட்ஸ் அப் மூலம் திரண்ட போராட்டக்காரர்கள்..
4வது நாளான இன்று அவர்களின் போராட்டம் வன்முறையாக மாறியது. போலீசாரை நோக்கி கற்களை வீசி தாக்கத் தொடங்கினர். பதிலுக்கு போலீசார் தடியடி நடத்தியும், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டும் அவர்களை கலைக்க முயன்றனர்.

இதற்கிடையே, மாணவி படித்த பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்த போராட்டக்காரர்கள், அங்கிருந்த பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்கினர். மேலும், பள்ளி வளாகத்தில் இருந்த 10-க்கும் மேற்பட்ட பள்ளி பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி கலவரம்: 'போராட்டத்தில் மாணவியின் உறவினர் யாரும் இல்லை' -  வாட்ஸ் அப் மூலம் திரண்ட போராட்டக்காரர்கள்..
இதனிடையே, கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு, கள்ளக்குறிச்சி தாலுகா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார். மேலும், சின்னசேலம், நயினார்பாளையம் பகுதியிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் நிகழ்ந்த வன்முறை சம்பவத்தை கண்டித்து, தமிழகத்தில் நாளை முதல் அனைத்து நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் இயங்காது என, தமிழ்நாடு மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ நர்சரி பள்ளிகள் சங்கத்தின் தலைவர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

Next Story
Share it