சினிமா விமர்சகர்களை நாய் என்று திட்டிய தயாரிப்பாளர்!!
சினிமா விமர்சகர்களை நாய் என்று திட்டிய தயாரிப்பாளர்!!

வலிமை திரைப்பட வசூல் தொடர்பாக சினிமா தயாரிப்பாளர் ஒருவர் விமர்சகர்களை நாய் என திட்டியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல சினிமா பத்திரிகையாளர் ஒருவர் வலிமை படத்தின் பட்ஜெட்டையும், அதன் வசூலையும் ஒப்பிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் 112 கோடிக்கு மேல் செலவு செய்த தயாரிப்பாளருக்கு இந்தப் படத்தின் மூலம் 25 கோடிகள் மட்டுமே லாபம் கிடைத்ததாக கூறியிருந்தார்.

இந்நிலையில் ட்விட்டர் ஸ்பேஸில் எனிமி பட தயாரிப்பாளர் வினோத்குமார் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட பத்திரிகையாளரை குரங்கு என்றும் நாய் பிஸ்கட்டுக்கு அலைகிறவர்கள் என்றும் கடுமையாக தாக்கி பதிலடி கொடுத்திருந்தார்.
இவர்கள் பணத்திற்காக பேசுகிறவர்கள். பணம் தராவிட்டால் இதே போல் கண்டதையும் உளறுவார்கள் என அவர் விமர்சித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக வலிமை திரைப்படம் குறித்த விமர்சனம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியது.
newstm.in

