Theme Check

நான்கு நாட்களில் சான்று.. விவசாயிகளுக்கு அமைச்சர் சொன்ன குட் நியூஸ்..!

நான்கு நாட்களில் சான்று.. விவசாயிகளுக்கு அமைச்சர் சொன்ன குட் நியூஸ்..!

நான்கு நாட்களில் சான்று.. விவசாயிகளுக்கு அமைச்சர் சொன்ன குட் நியூஸ்..!
X

“விவசாயிகளுக்கு, அவர்கள் கேட்கும் அடங்கல் உள்ளிட்ட சான்றுகளை நான்கு நாட்களில் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது” என, அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த வருவாய்த்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது.

கூட்டத்திற்கு பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் கூறியதாவது; “வருவாய்த்துறை செயல்பாடுகளை வேகப்படுத்தி, எளிமைப்படுத்த வேண்டும். கோவில் நிலங்களில் குடியிருப்போர், வீட்டு மனை பட்டா கோருவதால் அதை சட்டப்படி கையாள்வது குறித்து ஆலோசிக்கிறோம்.

இந்த ஆண்டுக்கான பயிர் காப்பீடு செலுத்துவதற்கான அவகாசம் வரும் 30-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால், விவசாயிகளுக்கு, அவர்கள் கேட்கும் அடங்கல் உள்ளிட்ட சான்றுகளை நான்கு நாட்களில் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஊராட்சி மற்றும் வருவாய்த் துறை இணைந்து, தமிழகத்தில் முதல்கட்டமாக, 876 பஞ்சாயத்துகளில் நிர்வாக அலுவலகங்கள், கூட்ட அரங்கம், வி.ஏ.ஓ. அலுவலகங்கள் இணைந்த ‘கிராம செயலகம்’ கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் கிராமங்களை தேர்வு செய்து, கட்டடம் கட்டப்படும்” என்று அவர் தெரிவித்தார்.

Next Story
Share it