Theme Check

சொத்து தகராறு… தம்பியை துப்பாக்கியால் சுட்ட அண்ணன்!!

சொத்து தகராறு… தம்பியை துப்பாக்கியால் சுட்ட அண்ணன்!!

சொத்து தகராறு… தம்பியை துப்பாக்கியால் சுட்ட அண்ணன்!!
X

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் சொத்து தகராறில் தம்பியை 'ஏர் கன்' எனப்படும் சிறிய ரக துப்பாக்கியால் சுட்ட அண்ணனை போலீஸார் தேடி வருகின்றனர்.

இடுக்கி மாவட்டம் அடிமாலையை சேர்ந்த சகோதரர்களான சாண்டோ (45), சிபு (39) ஆகிய இருவருக்கும் குடும்ப சொத்து தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சகோதர்களுக்குள் தகறாறு முற்றியுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த சாண்டோ, தனது வீட்டில் இருந்த 'ஏர் கன்' எனப்படும் சிறிய ரக துப்பாக்கியால் சிபுவை மூன்று முறை சுட்டுள்ளார். இதில் துப்பாக்கி குண்டுகள் சிபியின் கழுத்து பகுதியில் பாய்ந்தது.

air gun

இதனால் மயக்கமடைந்த சிபு அடிமாலி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து சிபுக்கு அறுவை சிகிச்சை மூலம் கழுத்தில் பாய்ந்திருந்த குண்டு அகற்றப்பட்டது.

இதையடுத்து உடும்பன்சோலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான அண்ணன் சாண்டோவை தேடி வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it