Theme Check

வாடகைக்கு வீடு எடுத்து விபச்சாரம்.. இளம்பெண் மீட்பு.. புரோக்கர் உட்பட மூவர் கைது..!

வாடகைக்கு வீடு எடுத்து விபச்சாரம்.. இளம்பெண் மீட்பு.. புரோக்கர் உட்பட மூவர் கைது..!

வாடகைக்கு வீடு எடுத்து விபச்சாரம்.. இளம்பெண் மீட்பு.. புரோக்கர் உட்பட மூவர் கைது..!
X

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மேலராமன்புதூரில் உள்ள ஒரு வாடகை வீட்டிற்கு இரவு நேரங்களில் ஆண்களும், பெண்களும் வந்து சென்றுள்ளனர்.

இதனால் சந்தேகமடைந்த அந்த பகுதி மக்கள், நேசமணி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அந்த வீட்டை ரகசியமாக கண்காணித்தனர்.

இந்த நிலையில் நேற்று மதியம் நேசமணி நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட் ஜெயின் மற்றும் போலீசார் அந்த வீட்டில் அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர்.
நாகர்கோவில் அ. தி. மு. க. பிரமுகர் மகன் கடத்தல்? போலீசார் விசாரணை.
அப்போது, அங்குள்ள ஒரு அறையில் 26 வயது இளம்பெண் ஒருவர் அரை குறை ஆடையுடன் இருந்தார். அவருடன் 2 ஆண்களும் இருந்தனர்.

போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர். போலீசார் அவர்களை மடக்கிப் பிடித்தனர். அத்துடன் இளம்பெண்ணையும் மீட்டனர்.

அந்த இளம்பெண்ணிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

அவரை, கன்னியாகுமரி லீ புரத்தைச் சேர்ந்த ராஜம் (62) என்ற பெண், அதிக பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறி விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து, இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்த நித்திரவிளை அங்கன்விளையைச் சேர்ந்த வினு (34), பாலவிளையைச் சேர்ந்த ஜோஸ் (43) மற்றும் பெண் புரோக்கர் ராஜம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மீட்கப்பட்ட இளம்பெண் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

Next Story
Share it