எலான் மஸ்க்-க்கு எதிர்ப்பு.. ட்விட்டரை விட்டு வெளியேறிய பிரபல நடிகை !!

எலான் மஸ்க்-க்கு எதிர்ப்பு.. ட்விட்டரை விட்டு வெளியேறிய பிரபல நடிகை !!

எலான் மஸ்க்-க்கு எதிர்ப்பு.. ட்விட்டரை விட்டு வெளியேறிய பிரபல நடிகை !!
X

உலகின் முதல் நிலை பணக்காரர் எலான் மஸ்க். ராக்கி பாய் போன்று இந்த உலகத்தின் CEO நான் என்று கூறும் அளவுக்கு பெரும் பணக்காரர். இந்த நிலையில், அண்மையில் எனக்கு ட்விட்டர் பிடித்திருக்கிறது என்று டெஸ்லா நிறுவன சி.இ.ஓ. எலான் மஸ்க் ஒரு முறை ட்வீட் செய்தார். அதை பார்த்த ஒருவரோ, பிடித்திருந்தால் வாங்க வேண்டியது தானே என்று கேட்டார். சற்றும் எதிர்பாராதவிதமாக, ட்விட்டர் விலை என்னவென்று பதிலுக்கு ட்வீட் செய்தார் மஸ்க்.

elan musk twitter

அவர் ஏதோ ஜோக்கடிக்கிறார் என்று பலரும் நினைத்தார்கள். இந்நிலையில் நிஜமாகவே ட்விட்டரை வாங்கிவிட்டார் எலான் மஸ்க். 44 பில்லியன் டாலர்கள் கொடுத்து ட்விட்டர் நிறுவனத்தை மொத்தமாக தனி ஆளாக வாங்கிவிட்டார் எலான் மஸ்க். இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துவருகின்றனர்.

ஆனால் எதிர்ப்பும் உள்ளது. எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியதை எதிர்த்து ட்விட்டரில் இருந்து வெளியேறிவிட்டார் இங்கிலாந்தை சேர்ந்த நடிகையான ஜமீலா ஜமீல். அவர் தன் கடைசி ட்வீட்டில் கூறியிருப்பதாவது, அவர் (எலான் மஸ்க் ) ட்விட்டரை வாங்கிவிட்டார். இது தான் என் கடைசி ட்வீட்டாக இருக்கும். பரோல்டின் புகைப்படங்களை வெளியிட ஒரு சாக்கு. கருத்து சுதந்திரத்தால் இங்கு நிறை மோசமான விஷயங்கள் நடக்கப் போகிறது. வாழ்த்துக்கள் என்றார்.

elan musk twitter

எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியிருப்பதால் நடந்திருக்கும் ஒரு நல்ல விஷயம் நான் ஒரு வழியாக ட்விட்டரை விட்டு விலகுவது என்றார்.

எலான் மஸ்க் வாங்கிட்டார், நான் ட்விட்டரை விட்டுப் போகிறேன் என்று இந்தியர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் #leavingtwitter என்கிற ஹேஷ்டேக் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது.


newstm.in


Tags:
Next Story
Share it