Theme Check

மனைவியின் கைகளை கட்டி தலை முடியை அறுத்த சைக்கோ கணவன்!!

மனைவியின் கைகளை கட்டி தலை முடியை அறுத்த சைக்கோ கணவன்!!

மனைவியின் கைகளை கட்டி தலை முடியை அறுத்த சைக்கோ கணவன்!!
X

பெண் ஒருவரின் கைகளை கட்டி ஒரு நபர் அவர் தலைமுடியை அறுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வீடியோவில் வீட்டிற்குள் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு நபர் இருக்கும் நிலையில் பின்னால் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருக்கும் ஒரு பெண்ணை ஆபாசமாக திட்டி எட்டி உதைக்கிறார்.

பின்னர் அந்த பெண்ணின் தலைமுடியை கத்திரிக்கோலால் அறுக்க முயல்கிறார். சரியாக அறுக்கமுடியாததால் அரிவாள்மனையை கொண்டு வந்து தலைமுடியை அறுக்கிறார்.

vdp

இந்த வீடியோ வைரலானதை அடுத்து இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், கைகள் கட்டப்பட்டிருந்த பெண் பானு என்பதும், முடியை அறுக்கும் நபர் கார்த்தி என்பதும் தெரியவந்தது.

இரண்டு பேரும் இரண்டாவது முறை திருமணம் ஆனவர்கள். இருவருக்கும் ஏற்பட்ட குடும்ப தகராறில் பானு தனியாக பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பானுவை தேடி கண்டுபிடித்து கார்த்திக் கைகளை கட்டிப்போட்டு தலை முடியை வெட்டுவதும் தெரியவந்தது.

சில மாதங்களாக வடபழனியில் வசித்து வந்த இவர்கள் தற்போது வீட்டை காலி செய்துவிட்டு வேறு ஒரு இடத்தில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it