Theme Check

பொதுக்குழுவில் பரபரப்பு.. போலி அட்டையுடன் வந்தவர்கள் போலீசாருடன் வாக்குவாதம்..!

பொதுக்குழுவில் பரபரப்பு.. போலி அட்டையுடன் வந்தவர்கள் போலீசாருடன் வாக்குவாதம்..!

பொதுக்குழுவில் பரபரப்பு.. போலி அட்டையுடன் வந்தவர்கள் போலீசாருடன் வாக்குவாதம்..!
X

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் புயலை கிளப்பி இருக்கும் நிலையில், சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் இன்று அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் வெளியூரில் இருந்து வாகனங்கள் மூலம் வானகரத்தில் குவிந்து வருகின்றனர்.
General body meeting in a tense environment: AIADMK general body, executive  committee members visit | #லைவ் அப்டேட்ஸ்: பரபரப்பான சூழலில் அதிமுக  பொதுக்குழு கூட்டம்: ஒ.பன்னீர்செல்வம் ...
பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்கும் உறுப்பினர்களுக்கு தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், கூட்டத்தில் பங்கேற்கும் உறுப்பினர்கள் பொதுக்குழுவிற்கான அழைப்பிதழ், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, ஆதார் அல்லது வாக்காளர் அட்டை போன்றவை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

கூட்டத்தில் 2,500 பேர் பங்கேற்பதாக கூறியிருந்த நிலையில் சிலர் போலி அடையாள அட்டையுடன் வந்துள்ளனர். அவர்கள், பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இதனால் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் இடத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story
Share it