Theme Check

பேருந்தில் சிக்கிய 30 மாணவர்களை பத்திரமாக மீட்ட பொதுமக்கள்!

பேருந்தில் சிக்கிய 30 மாணவர்களை பத்திரமாக மீட்ட பொதுமக்கள்!

பேருந்தில் சிக்கிய 30 மாணவர்களை பத்திரமாக மீட்ட பொதுமக்கள்!
X

தெலுங்கானாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல மாவட்டங்களில் குளங்கள், கால்வாய்கள் நிரம்பி, வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில், மஹ்பூப்நகர் மாவட்டத்தில் பள்ளி வாகனம் வெள்ளத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

1

தெலுங்கானா மாநிலம் மஹ்பூப் நகரில் நேற்று காலை 30 மாணவர்களுடன் பள்ளிப்பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பள்ளிப் பேருந்து கொடூரூர்-மச்சனப்பள்ளி என்ற பகுதியின் அருகே ரயில் பாலத்தின் கீழே சென்றபோது மழைநீர் சூழ்ந்த இடத்தில் சிக்கியது.

இதையடுத்து பேருந்தில் இருந்த மாணவர்கள் சத்தமாக கூச்சலிட்டனர். அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் உடனடியாக விரைந்து சென்று பேருந்தில் இருந்த சிறார்களை பத்திரமாக மீட்டு, பேருந்தையும் அப்புறப்படுத்தினர். பேருந்து ராமச்சந்திரபுரத்தில் இருந்து சுகுருவுக்கு சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

தகுந்த நேரத்தில் அப்பகுதி மக்கள் மீட்பு பணியில் இறங்கியதால் மாணவ, மாணவிகளை பத்திரமாக மீட்கபட்டனர். இதில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.


Tags:
Next Story
Share it