Theme Check

பரோட்டாவுக்காக தள்ளுமுள்ளு.. திமுக கூட்டத்தில் சலசலப்பு !!

பரோட்டாவுக்காக தள்ளுமுள்ளு.. திமுக கூட்டத்தில் சலசலப்பு !!

பரோட்டாவுக்காக தள்ளுமுள்ளு.. திமுக கூட்டத்தில் சலசலப்பு !!
X

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில், திமுக சார்பில் இளைஞர்களுக்கான திராவிட மாடல் பயிற்சி பாசறை நடைபெற்றது. இதில், திமுகவைச் சேர்ந்த ஏராளமான இளம் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தடால், புடால் ஏற்பாடு உடன் கூட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். இதனைத்தொடர்ந்து கூட்டத்திற்குப் பின் அதில் கலந்துகொண்ட அனைவருக்கும் பஃபே முறையில் உணவு வழங்கப்பட்டது. தயாரிக்கப்பட்ட உணவு பாதி பேருக்கு மட்டுமே சரியாக இருந்ததால் மீதி பேருக்கு மீண்டும் உணவு தயாரிக்க தாமதமானது.

dsf

இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், உணவு தயாரிக்கும் இடத்துக்கே சென்று பரோட்டா மாஸ்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் வேகமாக தயாரிக்கப்பட்ட உணவுகளை பிரித்து கொள்வதில் திமுக நிர்வாகிகள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அனைவரும் ஒரே நேரத்தில் முண்டியடித்ததால் உணவுகளை கீழே கொட்டி வீணாக்கினர்.

நீண்ட நேரம் நடந்த கூட்டத்தில் கடைசிநேரத்தில் பாதிப்பேருக்கு உணவு கிடைக்காததால் அவர்கள் அதிருப்தியுடன் வெளியேறினர். மேலும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் சமையல்காரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

newstm.in

Next Story
Share it