Theme Check

போடு 'அரபிக் குத்து' - நாளை பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிள் !!

போடு 'அரபிக் குத்து' - நாளை பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிள் !!

போடு அரபிக் குத்து - நாளை பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிள் !!
X

பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிள் குறித்த அப்டேட்டால் விஜய் ரசிகர்கள் உற்சாகம்.

விஜய்யின் 65வது படமாக உருவாகி வருகிறது பீஸ்ட். அதாவது, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும், யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்ட நிலையில், படத்தின் புரோமோஷன் உள்ளிட்ட பிற வேலைகளில் படக்குழு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

beast

இந்த நிலையில் படத்தின் முதல் அப்டேட் கடந்த 7ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியானது. அதாவது அரபிக்குத்து பாடலின் ப்ரோமா வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன. பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிள் வெளியீட்டு தொடர்பான வீடியோவை வெளியிட்டு விஜய் ரசிகர்களை படக்குழு குஷிப்படுத்தியிருக்கிறது.

அதன்படி ‘பீஸ்ட்' திரைப்படத்தின் முதல் பாடல், காதலர் தினமான பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகும் என்று படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி நாளை படத்தின் முதல் பாடல் அரபிக்குத்து வெளியாக உள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பிலும் உற்சாகத்திலும் உள்ளனர்.


newstm.in

Next Story
Share it