Theme Check

சேர்த்து வைங்க.. சிம்பு வீட்டு முன் சீரியல் நடிகை போராட்டம்..!

சேர்த்து வைங்க.. சிம்பு வீட்டு முன் சீரியல் நடிகை போராட்டம்..!

சேர்த்து வைங்க.. சிம்பு வீட்டு முன் சீரியல் நடிகை போராட்டம்..!
X

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7C உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஸ்ரீநிதி.

குழந்தை பருவத்தில் இருந்தே பல சீரியல்களில் நடித்து வரும் இவர் தற்போது ‘நீ மோகினி’, ‘புதுப்புது அர்த்தங்கள்’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை ஸ்ரீநிதி கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “ஒருநாள் அனைவருக்கும் திருமணம் ஆகியிருக்கும், நானும் சிம்புவும் மட்டும் தான் மீதம் இருப்போம்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு ஒரு ரசிகர், ‘நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமே..?’ என கேள்வி எழுப்பியபோது, “செய்துகொள்ளலாம் தான், நல்ல ஐடியா தான், ஆனால் எனக்கு என்று ஒரு ஆள் இருக்கிறதே” என்று ஸ்ரீநிதி பதில் அளித்து இருந்தார்.

இந்நிலையில் திடீரென, சிம்பு வீட்டின் முன்பு அமர்ந்து சிம்புவை கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் என ஸ்ரீநிதி கூறியுள்ளார். அதை புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.

1

மேலும் அந்த பதிவில், “என்னால நம்ப முடியல; எனக்காக சிங்கிளா இருந்திருக்காரு, பாத்துட்டு இருக்குறவங்க எங்களை சேர்த்து வைங்க, லேட்டா தான் புரிஞ்சது.

இன்னொருத்தர நான் கல்யாணம் பண்ண மாட்டேன், ஜல்லிக்கட்டுக்கு மட்டும் போராட்டம், லவ்வுக்கு போராட்டம் இல்லையா..?” எனக் கூறி, சிம்பு வீட்டு முன்பு அமர்ந்து போராட்டம் செய்து வருவதாக கூறியுள்ளார்.

1

Next Story
Share it