Theme Check

“புடின் ஒரு கசாப்பு கடைக்காரர்” : ஜோ பைடன் சாடல்!!

“புடின் ஒரு கசாப்பு கடைக்காரர்” : ஜோ பைடன் சாடல்!!

“புடின் ஒரு கசாப்பு கடைக்காரர்” : ஜோ பைடன் சாடல்!!
X

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், புடினை கடுமையாக விமர்சித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைனின் அண்டை நாடான போலந்து சென்றுள்ளார். அங்கு பேசிய அவர், உக்ரைன் மீதான தாக்குதலில் ரஷ்யா வெற்றி பெறாது என்று கூறினார்.

உலக நாடுகள் நீண்ட நாள் போருக்கு தயாராக வேண்டும் என்று கூறிய பைடன், ரஷ்ய அதிபர் புடின் பதவியில் நீடிக்கக் கூடாது, நேட்டோ என்பது தற்பாதுகாப்புக்கான அமைப்புதானே தவிர, ரஷ்யாவை அழித்தொழிக்கும் அமைப்பு அல்ல என்று கூறினார்.

putin-biden

உக்ரைனில் ரஷ்யாவுக்கு ஒரு போதும் வெற்றி கிட்டாது என்று கூறிய அவர், ஜனநாயகம், சுதந்திரம், ஒளி, கண்ணியம், நம்பிக்கை ஆகியவை வேரூன்றிய ஒரு பிரகாசமான எதிர்காலம் நமக்கு உண்டு. கடவுளின் அருளால் அந்த மனிதர் அதிகாரத்தில் இருக்கக் கூடாது என்றார்.

ரஷ்ய அதிபர் புடின் ஒரு கசாப்புக் கடைக்காரர் என்று ஜோ பைடன் கடுமையாக விமர்சித்தார். பைடனின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ரஷ்யா, ரஷ்யாவை யார் ஆள வேண்டும் என்பதை அமெரிக்கா தீர்மானிக்க முடியாது. ரஷ்ய மக்கள்தான் புடினை அதிபராக தேர்ந்தெடுத்துள்ளனர் எனக் கூறியுள்ளது.

putin

அமெரிக்க அதிபரின் பேச்சு குறித்து விளக்கம் அளித்துள்ள வெள்ளை மாளிகை, ரஷ்யாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என பைடன் கூறவில்லை, அண்டை நாடுகள் மீது புடின் ஆதிக்கம் செலுத்தக் கூடாது என்றே கூறியதாக தெரிவித்துள்ளது.

newstm.in

Next Story
Share it